புளூசர்ட் மாறன் மீது நடவடிக்கை எடுங்கள்: ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'விவேகம்' படம் குறித்தும் இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த புளூசர்ட் மாறன் குறித்தும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது:
அஜித் நடித்த விவேகம்' படம் பார்த்தேன். படக்குழுவினர்களின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுக்கள். இந்த படத்தின் பல விமர்சனங்களை படித்தேன். அவர்கள் படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டையும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் புளூசர்ட் மாறனின் விமர்சனத்தில் மோசமான, மனதை கஷ்டப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமே இருந்தன
இந்த படத்தில் ஆச்சரியப்படும் வகையில் மனதை தொடும் வகையிலும் நிறைய காட்சிகள் இருந்தன. ஆனால் அந்த காட்சிகள் குறித்து ஒரு வார்த்தை கூட புளூசர்ட் மாறன் தனது விமர்சனத்தில் கூறவில்லை.
இது உண்மையில் விமர்சனம் இல்லை. அஜித் என்ற தனி மனிதர் மீதான தாக்குதல் மட்டுமே என்று தெரிகிறது. சினிமாவை விமர்சனம் செய்ய தகுதியற்ற இந்த மாறன் மீது சினிமாவில் உள்ள அத்தனை சங்கங்களும் உடனடியாக ஒன்று கூடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments