விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேருவேன்.. திமுக, அதிமுக, பாஜகவில் இருந்த நடிகர் பேச்சு..!
- IndiaGlitz, [Sunday,July 07 2024]
திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளில் இருந்த நடிகர் தான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாகவும் அவர் அழைத்தால் அவருடைய கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகன் ராதாரவி 50 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வரும் நிலையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் கடந்த 2000 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார் என்பதும், அதன் பின்னர் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் அவர் சில ஆண்டுகள் இருந்த நிலையில் அதன் பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆனால் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அவர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அவர் அதிமுகவில் இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் 2019 ஆம் ஆண்டு சேர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ’கடைசி தோட்டா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போது ’தான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாகவும், அவர் என்னை அழைத்தால் அவருடைய கட்சியில் நிச்சயம் நினைவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ’கடைசி தோட்டா’ திரைப்படத்தில் கதையின் கரு நான் என்னுடைய கேரக்டர் தான் என்றும் வனிதா விஜயகுமார் உள்பட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.