நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி மீது திமுக அதிரடி நடவடிக்கை!
- IndiaGlitz, [Monday,March 25 2019]
சமீபத்தில் நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக பாடகி சின்மயி, இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் அனிதா உதூப், வரலட்சுமி உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்
இந்த நிலையில் ராதாரவியின் இந்த கருத்தால் அவர் சார்ந்து இருக்கும் திமுகவையும் சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நேரத்தில் ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதை அடுத்து ராதாரவியை திமுக அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்' என அறிவிக்கப்பட்டுள்ளது