தனிமைப்படுத்திய விவகாரம்: நடிகர் ராதாரவி விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ராதாரவி சமீபத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினர்களுடன் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் அங்குள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த செய்தியின் அடிப்படையில் ஒரு சிலர் ராதாரவிக்கு கொரோனா பரவியதாக வதந்தி கிளப்பி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ராதாரவி இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வந்தால் தனிமைப்படுத்துதல் என்பது முறையானது தான். இது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான். அவ்வாறு தனிமைப்படுத்துதலுக்கு ஏற்றுக் கொண்டால் மட்டுமே கார் பாஸ் கொடுப்பார்கள். எனவே தனிமைப்படுத்துதல் என்பதில் தவறேதுமில்லை.
நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என்றாலும் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நண்பர் பாரதிராஜாவுக்கும் இதே போன்ற பிரச்சனை எழுந்தது. நானும் அவரும் முகம் தெரிந்த நபர்கள் என்பதால் ஒருசில தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு சிலர் தவறாக தான் எழுதுவார்கள் அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு நான் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்றும் அரசு எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று அனுமதி கொடுக்கின்றதோ, அதன் பிறகு நானும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும் கூறிய ராதாரவி அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு உள்ளே இருங்கள் என்றும் கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Actor Radharavi statement from Kotagiri regarding Quarantine#News23 #NM pic.twitter.com/l4ILTIWk0f
— Nikil Murukan (@onlynikil) May 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments