பிரபல தமிழ் நடிகர் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராதாரவி வீட்டில் தனிப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் நடிகர் ராதாரவிக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டிற்கு நடிகர் ராதாரவி தனது உறவினர் 8 பேருடன் கடந்த 10ஆம் தேதி வந்துள்ளார். இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோத்தகிரி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் நடிகர் ராதாரவியின் வீட்டில் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் ராதாரவி வீட்டில் தனிமைபடுத்துதல் ஸ்டிக்கரையும் சுகாதாரத்துறையினர் ஒட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஊரடங்கு நேரத்தில், கொட்டும் மழையில், நடுரோட்டில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி', தளபதி விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' விக்ரம் நடித்த 'கந்தசாமி' உள்பட பல தமிழ் படங்களிலும்

ஊழியருக்கு கொரோனா: சென்னை அண்ணாசாலை பிரியாணி கடையை மூடிய போலீசார்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த கடையை போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்

கொரோனா நோய்த்தொற்று எந்தெந்த உடல் உறுப்புகளை, எப்படி பாதிக்கிறது தெரியுமா???

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவும் போது நிமோனியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது

20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விபட்டதும் பார்த்ததும் இல்லை.