புனித் ராஜ்குமார் இப்படிப்பட்ட நபரா? மரணத்திற்கு பின் தெரிய வந்த ஆச்சரியமான தகவல்!
- IndiaGlitz, [Friday,October 29 2021]
பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது கன்னட திரை உலகையே ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இந்திய திரை உலகில் உள்ள பிரபலங்கள் அனைவருமே அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புனித் ராஜ்குமார் என்றாலே இதுவரை ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்ற நிலையில் அவர் இப்படிப்பட்ட நபரா? என்ற ஆச்சரிய தகவல் தற்போது அவருடைய மரணத்திற்கு பிறகு பலருக்கு தெரிய வந்துள்ளது.
புனித் ராஜ்குமார் அவர்கள் 26 அனாதை இல்லங்களை தன்னுடைய சொந்த பணத்தில் நடத்தி வருகிறார். அதில் ஆயிரக்கணக்கானோர் நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 45 பள்ளிகளை நடத்தி அதில் இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வயதானவர்களுக்கான 16 இல்லங்கள், 19 பசு பாதுகாப்பு நிலையங்கள் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார். மேலும் 1800 ஏழை எளிய குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மைசூரில் உள்ள ’சக்தி தர்மா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளார். 46 வயதில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இவ்வளவு பெரிய சமூக சேவைகளை சத்தமின்றி செய்து வந்துள்ளார் என்பது அவரது மரணத்திற்குப் பிறகுதான் பலருக்கு தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது மரணத்திற்குப் பின்னர் அவர் தனது கண்களையும் தானம் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சமூக சேவை மனப்பான்மையுள்ள ஒரு சிறந்த மனிதரை இறைவன் மிக விரைவில் அழைத்துக்கொண்டது மிகப்பெரிய சோகத்திற்கு உள்ளானது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.