விஜய் சேதுபதி பட ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதியின் படம் ரிலீசுக்கு தயாராகி பல வருடங்கள் ஆன போதிலும் ரிலீஸாவதற்கு காலதாமதமான நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் ஒருவர் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மாமனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தயார் ஆனது. இருப்பினும் பல்வேறு பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள ரிலீஸ் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் பெற்றுள்ளார். இதனை அடுத்து அவர் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படம் குறித்து ஆர்கே சுரேஷ் கூறியபோது, ‘நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை அதன்பின்பு இப்படி ஒரு படமா #மாமனிதன் என்று வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மற்றும் மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் விஜய்சேதுபதி, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம்’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ‘தர்மதுரை’ படத்தை ஆர்கே சுரேஷ் தயாரித்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் என்பதும் அவரே இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை அதன்பின்பு இப்படி ஒரு படமா #மாமனிதன் என்று வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மற்றும் மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் நீ @VijaySethuOffl சேது ??என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம் pic.twitter.com/JYeOdE9c1O
— RK SURESH (@studio9_suresh) March 16, 2022
மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி ??
— RK SURESH (@studio9_suresh) March 16, 2022
TN & Kerala theatrical rights of #Maamanithan bagged by @STUDIO9_produc
May 2022 release@ilaiyaraaja & @thisisysr Musical @VijaySethuOffl @seenuramasamy @YSRfilms @SGayathrie @mynnasukumar @sreekar_prasad @U1Records @CtcMediaboy pic.twitter.com/1Jt0lsDdHA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments