பிரபல தமிழ் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: தாயார் குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
மனுநீதி, சூப்பர் குடும்பம், தவசி, காதல் பூக்கள், சவுண்ட் பார்ட்டி ஆகிய தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பிரதியூஷா. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். காதல் தோல்வியால் பிரதியூஷாவும், அவரது காதலர் சித்தார்த்தும் விஷம் குடித்ததாகவும், இதில் சித்தார்த் உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிரதியூஷா மரணம் அடைந்து 15 வருடங்கள் ஆன பின்னர் தற்போது அவரது தாயார் சரோஜினி, தனது மகளின் மரணத்திற்கு காரணம் சித்தார்த்தும் அவரது நண்பர்களும் தான் என்றும், தனது மகள் கூட்டுப்பலாத்காரத்திற்கு ஆளாகியதோடு, அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'என் மகள் விஷம் குடித்து சாகவில்லை. அவரை சித்தார்த்தும் அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்து வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி சாகடித்துள்ளனர். பிரதியூஷா கழுத்தில் நகக் கீறல்கள் இருந்ததை போலீசார் உள்பட அனைவரும் மறைத்துள்ளனர். சித்தார்த் விஷம் குடிக்காமல் ஒருசில துளிகளை உதட்டில் தடவி விஷம் குடித்ததாக நாடகமாடியுள்ளர்.
இந்த சம்பவத்தால் எனக்கு மிகுந்த மனவலி ஏற்பட்டதோடு எனது மகனின் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் ஒரு ஆதாரத்தை கூட சேகரிக்கவில்லை, அதுமட்டுமின்றி எனது மகள் அணிந்த ஆடையையும் என்னிடம் ஒப்படைக்கவில்லை. எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 15 வருடங்களாக தனியாக போராடி வருகிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com