செல்ல மகளின் பிறந்தநாள்… கவிதை எழுதி அசத்திய பிரபல தமிழ் நடிகரின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் பிரசன்னா தனது செல்ல மகளின் பிறந்தநாளிற்கு அழகான கவிதை ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நட்சத்திர ஜோடிகளாக வலம்வரும் நடிகர் பிரசன்னா- நடிகை சினேகா இருவரும் காதலித்து கடந்த 2012 மே மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இந்த ஜோடிக்கு கடந்த 2015இல் விகான் என்ற ஆண் குழந்தையும் கடந்த 2020 ஜனவரியில் ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.
இந்நிலையில் ஆத்யந்தாவின் 2 ஆவது பிறந்தநாளை நடிகர் பிரசன்னா- சினேகா தம்பதியினர் இன்று விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் தனது செல்ல மகளின் பிறந்த நாளையொட்டி நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தோளுல தவழுற தாயே, என் தேனு முட்டாயேட்டாயே! மார்கழி மாசத்து மழையே, என் சிரிக்கும் மத்தாப்பே! வீட்டுல வளருற நிலவே, என் செல்ல பொன்வண்டே! வெல்ல கட்டி முத்தமே, என் உசுரு மொத்தமே! சாமியே செஞ்ச தவமே! மகளே! நீ வாழு நூறு யுகமே…“ எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் பதிவைப் பார்க்கும் ரசிகர்கள் மகள் இருக்கும் அப்பாவிற்கே உரித்தான பாசம் இது என நெகிழ்ச்சியோடு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதேபோல நடிகை சினேகாவும் என் தேவதைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com