ஏன் வீண் கலகம்? ஊடகங்களுக்கு நடிகர் பிரச்சன்னா கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற ரமேஷ் போகிரியால் நிஷாங் அவர்களிடம் புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவு நேற்று அளிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவால் அமைக்கப் பட்ட இந்த பரிந்துரையில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது 484 பக்கங்கள் கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை குறித்து பொதுமக்கள், ஜூன் 30 ஆம் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க முயற்சி செய்வதாக ஒருசில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஏன் வீண் கலகம்? இந்தியை தெரிவு பாடமாக்க மட்டுமே பரிந்துரை. மாநில மொழியோடு இந்தியையும் விரும்பினால் படிக்கலாம். அவ்வளவே! இந்தி கட்டாயமென்றில்லை என்று கூறியுள்ளார்.
484 பக்கங்கள் கொண்ட இந்த புதிய கல்விக்கொள்கை வரைவை முழுமையாக படித்துவிட்டு கருத்து கூற வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments