மனநோய்‌ உள்ளவர்களால்‌ மட்டுமே இந்த கொடுமையை செய்ய முடியும்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் நடிகர் 

சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் மிகவும் தீவிரமாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து அவ்வபோது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியது இதுதான்:

சாத்தான்குளம்‌ இரட்டை கொலை ஏதோ ஒரு லாக்கப் மரணம் என்று கடந்து செல்ல இயலாது. அதன்‌ விவரங்கள்‌ படிக்கையில்‌ வார்த்தைகளற்றுபோகும்படியான மிக குரூரமான விதத்தில்‌ ஜெயராஜ் மற்றும்‌ ஃபெனிக்ஸ் தாக்கப்பட்டிருப்பது மனிதத்தன்மையற்ற காரியம்‌. ஆழ்ந்த மனநோய்‌ உள்ளவர்களால்‌ மட்டுமே இப்படியான கொடுமையை செய்ய முடியும்‌. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில்‌ தன்னலமின்றி சேவை செய்து இன்னுயிரையும்‌ தந்த தேவதை காவலர்க்கிடையில்‌ இப்படியான கொடுஞ்செயல்‌ சாத்தான்கள்‌ களையெடுக்கப்படவேண்டும்‌.

நீதியும்‌, கொல்லப்பட்ட உயிர்களுக்கான நியாயமும்‌ நிலைநாட்டப்படவேண்டும்‌. அதிகார துஷ்ப்ரயோகம்‌ செய்யாது நிலையில்‌ நின்று காவல்‌ பணி செய்திட மற்ற காவலருக்கு அறிவுறுத்தப்பட்ட வேண்டும்‌. பல பேரழுத்தங்களிலுள்ள காவலருக்கு எல்லை மீறாதிருக்க உளவியல்‌ ஆலோசனைகள்‌ வழங்கிடவேண்டும்‌. காவல்துறை உங்கள்‌ நண்பன்‌ என்னும்‌ வாக்கியத்தில்‌ ஏதேனும்‌ உண்மை இருப்பின்‌ அதை நிரூபித்து நம்பிக்கை கொள்ளச்செய்ய வெண்டும்‌.

இவ்வாறு நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

More News

ஓய்வுபெற மூன்றே நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவால் பலியான நர்ஸ்: அதிர்ச்சி தகவல் 

இம்மாதம் 30ஆம் தேதி அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஓய்வுபெற இருந்த தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லிப்கிஸ் கொடுத்து மோதிரம் மாற்றிய பீட்டர்பால்: வனிதா திருமணத்தின் சுவாரஸ்வமான தகவல்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் ஜூன் 27ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இண்டர்நெட் இல்லை, ஸ்மார்ட்போன் இல்லை: ஸ்பீக்கர் வைத்து பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

லாட்ஜில் எடுத்த ரகசிய வீடியோ: மயிலாப்பூர் இளம்பெண்ணின் பகீர் புகார்

தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஜாலியாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து காதலன் தன்னை மிரட்டுவதாகவும்

கொரோனா உயிரிழப்பு: ஜேசிபி வாகனத்தைக் கொண்டு உடலை அகற்றிய அவலம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை உலகச் சுகாதார நிறுவனம் நெறிப்படுத்தி வழங்கியிருக்கிறது.