துல்கர் சல்மான் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் தமிழ் நடிகர்?
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் பிரபாகரன் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக பிரச்சனை எழும்பியதால், தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் பிரபாகரனின் ஆதரவாளர்கள் துல்கருக்கு மிரட்டல் விடுத்தும், துல்கரின் குடும்பத்தையே இழுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் துல்கருக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ’நம்ம ஊர்ல ‘ஆணியே புடுங்க வேணாம்’ மற்றும் ‘என்ன கொடுமை சரவணன் இது’ போன்ற பழைய படங்களில் வந்த வசனங்களை புதிய படங்களில் காமெடிக்கு பயன்படுத்துவது போல் பழைய மலையாள படம் ஒன்றில் வரும் நகைச்சுவை காட்சிதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் துல்கரை விமர்சனம் செய்த நெட்டிசன்கள் தற்போது பிரச்சன்னாவையும் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி தகாத வார்த்தைகளால் அவரது குடும்பத்தையும் விமர்சனம் செய்து வந்தால், அதிர்ச்சி அடைந்த பிரசன்னா, சமூகவலைத்தளத்தில் இருந்தே விலகலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளம் என்ற மிகப்பெரிய ஆயுதம் அணுகுண்டை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.