'இந்தி தெரியாது போடா': கன்னட மொழியில் டீசர்ட் அணிந்த பிரகாஷ்ராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை உலக பிரபலங்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் ’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ’இந்தி தெரியாது போடா’ போன்ற வாசகங்களை கொண்ட டீசர்ட் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதுகுறித்து ஹேஷ்டேக்குகள் சமூக வளைதளத்தில் இந்திய அளவில் டிரெண்டானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ’ஹிந்தி தெரியாது போடா’ உள்பட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகள் ஆயிரக்கணக்கில் ஆர்டர்கள் குவிந்துள்ளதாக திருப்பூர் பனியன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிரான டி-ஷர்ட் கலாச்சாரம் ஆரம்பித்துள்ளது. இதனை தொடக்கி வைத்து இருப்பவர் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திக்கு எதிராக கன்னட மொழியில் எழுதி இருக்கும் இந்த டீசர்ட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எந்த மொழியை கற்றுக் கொள்தல் என்பது என்னுடைய விருப்பத்திற்கு உரியது. எனது பெருமை எனது தாய்மொழி. ஹிந்தியை திணிக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிரான டீசர்ட் போர் திடீரென தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ಹಲವು ಭಾಷೆ ಬಲ್ಲೆ.. ಹಲವು ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡಬಲ್ಲೆ..ಆದರೆ ನನ್ನ ಕಲಿಕೆ..ನನ್ನ ಗ್ರಹಿಕೆ..ನನ್ನ ಬೇರು..ನನ್ನ ಶಕ್ತಿ...ನನ್ನ ಹೆಮ್ಮೆ..ನನ್ನ ಮಾತೃಭಾಷೆ ಕನ್ನಡ #ಹಿಂದಿ_ಹೇರಿಕೆ_ಬೇಡ ..NO #HindiImposition #justasking pic.twitter.com/B8RWHt8dVC
— Prakash Raj (@prakashraaj) September 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments