'இந்தி தெரியாது போடா': கன்னட மொழியில் டீசர்ட் அணிந்த பிரகாஷ்ராஜ்

  • IndiaGlitz, [Sunday,September 13 2020]

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை உலக பிரபலங்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் ’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ’இந்தி தெரியாது போடா’ போன்ற வாசகங்களை கொண்ட டீசர்ட் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதுகுறித்து ஹேஷ்டேக்குகள் சமூக வளைதளத்தில் இந்திய அளவில் டிரெண்டானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ’ஹிந்தி தெரியாது போடா’ உள்பட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகள் ஆயிரக்கணக்கில் ஆர்டர்கள் குவிந்துள்ளதாக திருப்பூர் பனியன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிரான டி-ஷர்ட் கலாச்சாரம் ஆரம்பித்துள்ளது. இதனை தொடக்கி வைத்து இருப்பவர் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திக்கு எதிராக கன்னட மொழியில் எழுதி இருக்கும் இந்த டீசர்ட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எந்த மொழியை கற்றுக் கொள்தல் என்பது என்னுடைய விருப்பத்திற்கு உரியது. எனது பெருமை எனது தாய்மொழி. ஹிந்தியை திணிக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிரான டீசர்ட் போர் திடீரென தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விஜய் தேவரகொண்டா விடுத்த எச்சரிக்கை: திரையுலகில் பரபரப்பு

பிரபல தமிழ், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து தயாரிப்பாளர் தரப்புக்கு திடீரென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நான் பாஜகவில் இணைகின்றேனா? விஷால் விளக்கம்

நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் விரைவில் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில்

தாலி, மெட்டியை கழட்டிவிட்டு நீட் தேர்வு எழுதிய புதுமணப்பெண்: நெல்லையில் பரபரப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. கடும் சோதனைக்கு பின்னர் இன்று மதியம் 2 மணிக்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்

பெரியாருடன் ரஜினியை ஒப்பிட்ட ரசிகர்கள்: மதுரையில் மீண்டும் போஸ்டர் கலாச்சாரம்!

கடந்த சில நாட்களாக தளபதி விஜய்யை எம்ஜிஆருடன் உருவகப்படுத்தி விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே

பாஜகவில் சேரப்போகிறாரா விஷால்? எல்.முருகனை சந்திக்கவிருப்பதாக தகவல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் பலர் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் சமீபகாலமாக முன்னணி ஹீரோ ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக செய்திகள் கசிந்து கொண்டு வந்தது.