சூர்யாவை சவாலுக்கு அழைத்த பிரபல வில்லன் நடிகர்: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபல நடிகர் ஒருவர் அவரை சவாலுக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக திரையுலகினர் இடையே கிரீன் இந்தியா சேலன்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பது தெரிந்ததே, மகேஷ்பாபு, சமந்தா உள்பட பல நடிகர் நடிகைகள் இந்த சேலஞ்சை ஏற்று தங்கள் வீட்டு தோட்டத்தில் செடிகளை நட்டனர். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் இந்த சேலஞ்ச்சை ஏற்று செடிகள் நட்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது
இந்த நிலையில் தற்போது இந்த சேலஞ்ச் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வந்துள்ளது. அவர் தனது மகனுடன் இந்த சேலஞ்சை நிறைவேற்றும் வகையில் செடியை தனது வீட்டு தோட்டத்தில் நடவு செய்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
அதன் பின்னர் அவர் இந்த சேலஞ்சை நடிகர்கள் மோகன்லால், சூர்யா மற்றும் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷாவுக்கு விடுத்துள்ளார். சூர்யா உள்பட அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Thank you @MPsantoshtrs for this initiative. i have accepted #GreenindiaChallenge
— Prakash Raj (@prakashraaj) October 1, 2020
from @TanikellaBharni Planted 3 saplings.Further I am nominating @Mohanlal @Suriya_offl @rakshitshetty @meramyakrishnan @trishtrashers and everyone of you too ..pls????continue the chain #JustAsking pic.twitter.com/HrCNAvEGve
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments