தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் பேசியபோது, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திரையுலகம் நன்றி தெரிவித்து வரும் நிலையில் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவ்ர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களுக்கு நன்றி என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியம் ரூபாய் 4 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்பதும், நடிகர் சிவாஜி கணேசன், ராமசாமி படையாட்சி ஆகியோரின் பிறந்தநாட்களை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பும் முக்கியமானது.
ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டி தமிழக அரசு கெளரவித்த நிலையில் தற்போது அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments