இளையதிலகம் பிரபுவின் நெருங்கிய உறவினர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இளைய திலகம் பிரபுவின் நெருங்கிய உறவினர் காலமானதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான இளைய திலகம் பிரபு அவர்களின் மனைவி புனிதாவின் தாயார் இன்று காலமாகிவிட்டார். புனிதாவின் தாயார் திருமதி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில் இன்று அவர் காலமானதாகவும் இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிரபு குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments