நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரபு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் பிரபு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதால் அது குறித்த சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’நடிகர் பிரபு பிப்ரவரி 20ஆம் தேதி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கல் அடைப்பு பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சில மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பிரபு விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout