மாலத்தீவில் பிரபாஸ் நிச்சயதார்த்தம்? பிரபல நடிகை தான் மணப்பெண்ணா?

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

பிரபல நடிகை உடன் பிரபாஸ் நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து பிரபாஸ் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்

‘பாகுபலி’ என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ் என்பதும் 42 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் சில நடிகைகளுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸ் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் என்பவரை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நிச்சயதார்த்தம் அடுத்த வாரம் மாலத்தீவில் நடைபெற இருப்பதாக சினிமா விமர்சகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் இந்த செய்தி மிக வேகமாக காட்டுத்தீ போல் பரவியது.

இந்த நிலையில் இது குறித்து பிரபாஸ் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். பிரபாஸ்- கீர்த்தி சனோன் நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடைபெறவுள்ளது என்பது முழுக்க முழுக்க கற்பனையான ஒரு தகவல் என்றும் அதில் சிறிது கூட உண்மை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் ஆகிய இருவரும் சக நடிகர் நடிகைகள், அதை தாண்டி அவர்கள் இடையே வேறு எந்த விதமான உறவும் இல்லை என்றும் பிரபாஸ் தரப்பினர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரபாஸ் கீர்த்தி சனோன் நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடைபெற இருப்பதாக வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.