சாலையில் ஆபத்தான பள்ளம்.. சொந்த செலவில் சரி செய்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாலையில் ஆபத்தான பள்ளம் இருந்ததை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவஸ்தை அடைந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தனது சொந்த செலவில் அந்த பள்ளத்தை சரி செய்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்செனேகர் என்பதும் அவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் 20 வயதிலேயே உலக ஆணழகன் பட்டத்தை வென்றார் என்பதும் அது மட்டும் இன்றி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் ஆகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவரது வீடு உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம் இருந்ததை அடுத்து அந்த பள்ளத்தை பல வாரங்களாக அரசு கவனிக்காமல் இருந்தது. இதையடுத்து அவரே தனது சொந்த செலவில் அந்த பள்ளத்தை தார் போட்டு சரி செய்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பல வாரங்களாக கார்கள் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள் ஆபத்தை சந்திக்கும் அளவிற்கு ராட்சத பள்ளம் இருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மிகுந்த கவலை அடைந்த நிலையில் நான் என்னுடைய குழுவுடன் சென்று அதை சரி செய்தேன். நான் இப்பொழுதும் சொல்கிறேன், எதையும் குறை சொல்ல வேண்டாம், உங்களால் முடிந்த ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Today, after the whole neighborhood has been upset about this giant pothole that’s been screwing up cars and bicycles for weeks, I went out with my team and fixed it. I always say, let’s not complain, let’s do something about it. Here you go. pic.twitter.com/aslhkUShvT
— Arnold (@Schwarzenegger) April 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com