நாடக நடிகர் 'பூ' ராமு காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடக நடிகரும் சசி இயக்கத்தில் உருவான ‘பூ’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான ராமு நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடக நடிகரான ராமு, சசி இயக்கிய ‘பூ’ சீனு ராமசாமி இயக்கிய ’நீர்ப்பறவை’, ராம் இயக்கிய ’தங்க மீன்கள்’ மாரி செல்வராஜ் இயக்கிய ’பரியேறும் பெருமாள்’ ’கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிகவும் இயல்பாக நடிக்கக்கூடிய நடிகர் என்பதால் இவரது நடிப்பு பெரும் பாராட்டுகள் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென ராமுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ராமுக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது சொந்த ஊர் சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிய வருகிறது. ராமு மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments