நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் திடீர் விலகல்
- IndiaGlitz, [Monday,December 11 2017]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷால் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதன் செயலாளர் ஞானவேல்ராஜா பதவி விலகியதை அடுத்து தற்போது நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் திடீரென தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தனது ராஜினாமா கடிதத்தில், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல் என்றும், நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என அனைவரும் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
பொன்வண்ணனின் இந்த ராஜினாமா முடிவுக்கு இயக்குனர் சேரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.