கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய தமிழ் நடிகர்-அரசியல்வாதி!

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேலானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர்-அரசியல்வாதி கருணாஸ் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வரும் போது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் ’தான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாகவும் மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார். அதேபோல் தனது தந்தை நல்ல முறையில் குணமாகி வருவதாக அவரது மகனும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் தற்போது கொரோனாவில் இருந்தே பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். தான் குணமடைய உதவி செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கருணாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

More News

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜின் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம்

சென்னையில் டாஸ்மாக் திறக்கும் தேதி அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.

எஸ்பிபி குறித்த மகிழ்ச்சியான செய்தி தெரிவித்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்: சைலேந்திரபாபு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் ஐஜியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே.

சூர்யா ரிலீஸ் செய்த டிரைலர்: 28ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்