பழம்பெரும் நடிகர் சோ மனைவி காலமானார். அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர், அரசியல் பிரமுகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல திறமைகளுடன் விளங்கிய சோ ராமசாமி, மனைவி சவுந்திரா ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84
சோ மற்றும் சவுந்திரா ராமசாமி ஆகிய இருவருக்கும் இடையே 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோ ராமசாமி அரசியல், பத்திரிகை மற்றும் சினிமா துறையில் சிறந்து விளங்க அவரது மனைவி முதுகெலும்பாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
சவுந்திரா ராமசாமி தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக சில நோய்களால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அவர் காலமான தகவலை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சசிகலா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com