நடிகர், அரசியல்வாதி ஜே,.கே.ரித்திஷ் காலமானார்

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

முன்னாள் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46

கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ரித்தீஷ் சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இவர் ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.