பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம் காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

ஏராளமான நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பழம்பெரும் குணசித்திர நடிகர் பீலிசிவம் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. 

கடந்த 1938ஆம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத்துறையில் ஈடுபட்டு வந்தார். நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பீலிசிவம் அவர்களுக்கு கடந்த 1995ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கெளரவித்தது

குணசித்திர கேரக்டர்களில் தனக்கென தனி பாதை அமைத்து நடிப்பை வெளிப்படுத்திய பீலிசிவம் அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீலிசிவம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

நயன்தாராவின் 'அறம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'அறம்' ....

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறக்கும் தேதி அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி பிறந்த நாள் அன்று திறக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சத்தை தட்டி சென்ற பிக்பாஸ் வெற்றியாளர் இவர்தான்

பிக்பாஸ் தமிழ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுஜாவின் முதல் பதிவு

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட சுஜா, முதன்முதலாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பதிவு இது

முதல்வர் பதவி என்ன மூர்மார்க்கெட் பொம்மையா? கமலுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தமிழக அரசின் டெங்கு நடவடிக்கையை குறைகூறி, சென்னை மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்ததையும் சுட்டி காட்டி, இந்த அரசு விலக வேண்டும்