இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை. பார்த்திபனின் வருத்தமான பதிவு

  • IndiaGlitz, [Tuesday,April 04 2017]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி' அமோகமாக வெற்றி பெற்று வரும் 6ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் நிர்வாக கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.பார்த்திபன் ஆடியோ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு வருத்தமான பதிவு. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. வாக்காளர்களின் நேர்மைக்காக சொல்கின்றேன். இந்த தேர்தலில் தனிப்பட்ட முறையில் நான் யாரிடமும் ஒரு வாக்குகூட கேட்கவில்லை. அப்படி இருந்தும் எனக்கு 501 வாக்குகள் கிடைத்துள்ளது. இது ஒன்றும் அரசியல் தேர்தல் அல்ல. இந்த சங்கத்தில் அங்கம் வகிக்க தங்கம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

லஞ்ச லாவண்யத்தின் மூலம் பதவியேற்பதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை. நாம் தூய்மையாக இருந்தால்தான் நம்மிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை எதிர்க்கும் துணிச்சல் வரும். சினிமாவின் மூலமாக அரசியலை எதிர்க்கும் தைரியமும் நமக்கு வரும். இனி அது நடக்கும். இவ்வாறு பார்த்திபன் தனது ஆடியோ செய்தியில் கூறியுள்ளார்.

More News

நயன்தாராவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மிகப்பெரிய உதவி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'டோரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

ரஜினியின் இடத்தில் இருந்து பணியை தொடங்கும் விஷால் குழு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்று அதில் விஷால் தலைமையிலான நம்ம அணி கிட்டத்தட்ட அனைத்து பதவிகளுக்கும் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'குற்றம் 23' வெற்றியால் அருண்விஜய்க்கு கிடைத்த பரிசு

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெடிக்கல் க்ரைம் படமான 'குற்றம் 23' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

'காற்று வெளியிடை' படத்தின் ரன்னிங் டைம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெள்ளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்,

'தல' தோனியை தேடி வந்த சி.இ.ஓ பதவி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தோனிக்கு பிரபல நிறுவனமான கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவி தேடி வந்துள்ளது.