close
Choose your channels

மாலையும் கழுத்துமாக மனைவியுடன் நடிகர்-இயக்குனர் பாண்டியராஜன்.. வீட்ல என்ன விசேஷம்?

Thursday, March 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் தனது மனைவியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் அவரது மகன் பிரித்விராஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாண்டியராஜன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களின் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருந்து அவரது படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் பாண்டியராஜன். அதன் பிறகு ’கன்னி ராசி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி ’ஆண் பாவம்’ என்ற திரைப்படத்தை அவரே இயக்கி நடித்தார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் பல திரைப்படங்களை நடித்துள்ள நிலையில் கடைசியாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் பாண்டியராஜனின் 37 வது திருமண நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றதை அடுத்து அவரும் அவரது மனைவியும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை அவரது மகன் பிரித்திவிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இதில் அவரது முழு குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment