நிழல்கள் ரவி மனைவி, மகனை பார்த்திருக்கின்றீர்களா? பலரும் பார்க்காத புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நிழல்கள் ரவியின் மனைவி மற்றும் மகன் உள்ள குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’நிழல்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவி. இதனை அடுத்து அவரது பெயருடன் அவரது முதல் படமும் இணைந்து கொண்டது என்பதும், அதுமுதல் அவர் நிழல்கள் ரவி என்று அழைக்கப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1980களில் இருந்து அவர் நடித்து வரும் நிலையில் சுமார் 500 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார் என்றும் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கூட கடம்பூர் சம்பவராயர் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் நிழல்கள் ரவி கடந்த 1986 ஆம் ஆண்டு விஷ்ணு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 1988 ஆம் ஆண்டு ராகுல் ரவி என்ற மகன் பிறந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது என்பது இந்த திருமணத்தில் இசைஞானி இளையராஜா, சிவகுமார் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிழல்கள் ரவியின் மனைவி மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments