மரத்தில் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்ட முயன்ற பிரபல நடிகருக்கு நெருக்கமானவர் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிறிஸ்மஸ் பண்டிகை இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளதை அடுத்து அந்த பண்டிகைக்காக மரத்திலேறி கிறிஸ்மஸ் ஸ்டார் கட்ட முயன்ற பிரபல நடிகரின் மேக்கப்மேன் பரிதாபமாக கீழே விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ’நேரம்’ உள்பட ஒரு சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் ’பிரேமம்’ உள்பட பல திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல வருடங்களாக மேக்கப் மேனாக பணியாற்றி வருபவர் ஷாபு புல்பள்ளி. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேக்கப்மேன் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் வருவதை அடுத்து தனது வீட்டு அருகில் இருந்த மரத்தில் கிறிஸ்மஸ் ஸ்டாரை கட்டுவதற்காக ஏறினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்ததாகவும் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 37 வயதான ஷாபு புல்பள்ளி எதிர்பாராத விதத்தில் மரணமடைந்தது அவருடைய குடும்பத்தினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஷாபு புல்பள்ளி மரணம் குறித்த செய்தி அறிந்ததும் நடிகர் நிவின் பாலி தனது இரங்கலை தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் உள்பட பல பிரபலங்களும் ஷாபு புல்பள்ளி குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout