இறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ!

கொரோனா வைரஸ்க்கு இன்று ஒரே நாளில் இயக்குனர் அருண்ராஜ் காமராஜரின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகிய இருவர் பலியாகியுள்ளது உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனாவால் பலியான நிதிஷ் வீரா இறப்பதற்கு முன் பேசிய உணர்ச்சிவசமான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தனுஷுடன் நடித்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் அந்த வீடியோவில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்க்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.

வெற்றிமாறன் அவர்கள் இல்லை என்றால் இந்த படத்தில் நான் இல்லை என்றும் அவருக்கு தனது மிகப்பெரிய நன்றி என்றும் கூறியுள்ளார். அதேபோல் புதுப்பேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் அவர்களுடன் இணைந்து நடித்ததாகவும், தனக்கு அவர் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தார் என்றும், தன்னுடைய நடிப்பை அவருக்கு ஊக்குவிப்பார் என்றும் அவருக்கும் தனது மிகப்பெரிய நன்றி என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் அந்த படத்தில் தன்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உணர்ச்சிவசப்பட்டு அந்த வீடியோவில் நிதிஷ் வீரா பேசி உள்ளார்.

More News

அருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்!

கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனுக்கு திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் இன்று காலை பேரிடியாக பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா

கொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை!

தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிக்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

எனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை?

சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானிசங்கர் 'மேயாதமான்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட பல

முதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழக மக்கள். தொழிலதிபர்கள்

பயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...?

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.