என்னால முடியாதுன்னு நிறைய பேர் சொல்றாங்க.. திருமணம் குறித்து நெப்போலியன் மகன் வீடியோ..!
- IndiaGlitz, [Friday,October 11 2024]
நடிகர் நெப்போலியன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி வருகிறது, என்னால் முடியாது என்று பலர் சொல்வதைக் கேட்கும் போது நான் யார் என்பதை நிரூபித்தே ஆக வேண்டும்’ என்ற தன்னம்பிக்கை வீடியோ ஒன்றை நெப்போலியன் மகன் தனுஷ் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் நெப்போலியன் தனது மகன் தனுசுக்கு திருமண ஏற்பாட்டை செய்தார். திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவருடன் தனுசுக்கு நிச்சயதார்த்த முடிவடைந்த நிலையில் நவம்பர் மாதம் திருமண நடைபெற உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நெப்போலியன் தனது மகனுக்கு ஜப்பானில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்து கொள்வது நல்லது அல்ல என்றும் பலர் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சமீப காலமாக என்னைப்பற்றி சிலர் பேசிக் கொண்டிருப்பதை நான் இணையத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி சிலர் நெகட்டிவ்வாக பேசினாலும் எனக்கு அது உத்வேகமாக தான் இருக்கிறது. என்னால் முடியாது என்று சிலர் சொல்வதைக் கேட்கும் போது நான் யார் என்பதை நான் நிரூபித்து காட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன்.
என்னை மாதிரி இருக்கிறவர்கள் இதை செய்ய முடியாது, அதை செய்ய முடியாது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, விடாமுயற்சியோடு முயற்சி செய்தால் எதையும் நம்மால் செய்ய முடியும்’ என்று தன்னம்பிக்கையுடன் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.