தமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்

  • IndiaGlitz, [Tuesday,March 31 2020]

தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர்‌ சங்கத்தில்‌ திரைப்படங்களில்‌ நடிக்கும்‌ துணை நடிகர்‌, நடிகையர்கள்‌ சுமார்‌ 1500 உறுப்பினர்களும்‌ மற்றும்‌ தமிழகத்தில்‌ அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள்‌ சுமார்‌ 2000-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ உறுப்பினர்களாக உள்ளனர்‌.

தற்போது உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு காரணமாக தமிழகத்தில்‌ மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஏப்ரல்‌ 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது. இதனால்‌ திரைப்பட படப்பிடிப்புகளும்‌ மாவட்டங்களில்‌ நடைபெற இருந்த நாடக விழாக்களும்‌ நடைபெறாமல்‌ போனதால்‌ அதையே நம்பி இருக்கும்‌ அன்றாடம்‌ ஊதியம்‌ பெறும்‌ திரைப்படம்‌, நாடகம்‌ ஆகிய துறைகளில்‌ உள்ள கலைஞர்களின்‌ வாழ்வாதாரம்‌ மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள்‌ உட்பட அனைவரும்‌ தங்கள்‌ அடிப்படை தேவைகள்‌ கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தாங்கள்‌ இதனை கருத்திற்கொண்டு. தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம்‌ மூலம்‌ உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும்‌
இக்காலகட்டத்தில்‌ தாங்கள்‌ செய்யும்‌ பேருதவி எங்களின்‌ மனதில்‌ நீங்காத இடம்‌ பெறும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இவ்வாறு நடிகர் நாசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More News

தொழிலாளர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு அதிரடி

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அன்றாட தொழிலாளி முதல் மாத வருமானம் உள்ளவர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா பரவாமல் தடுக்க துப்பட்டா, கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது சரியா???

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாதுகாப்புகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன

ஈராக்; கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்குக் கூட இடமில்லையா???

ஈராக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது

கொரோனா வருமுன் முன்னெச்செரிக்கையாக மருந்து எடுத்து கொண்ட டாக்டர் பலி

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை எனினும் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை