முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நடிகரின் மனைவி: திமுகவில் இணைகிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை பாராட்டிய நிலையில் அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் என்பது தெரிந்ததே. இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு திடீரென கட்சியில் இருந்து விலகினார் என்ப்தும், இவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் சமீபத்தில் இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 4000 நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக அவர் 5.42 கோடி ஒதுக்கியதோடு, இன்று இந்த உதவி திட்டத்தை தொடங்கியும் வைத்தார்.
இந்த நிலையில் முதல்வரின் இந்த திட்டத்திற்கு கமீலா நாசர் பாராட்டு தெரிவித்துள்ளார். கமீலாவின் இந்தப் பாராட்டை அரசியல் வட்டாரங்கள் சாதாரணமாக பார்க்காமல் அவர் விரைவில் திமுகவில் சேர இருக்கிறார் என்ற கோணத்தில் பார்த்து வருகின்றனர். ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு முன்பே கமீலா நாசர் இணைந்துவிடுவார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி ???? https://t.co/MJDZA585PR
— Kameela (@nasser_kameela) June 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com