என் மகன் உயிர் பிழைக்க ஒருவகையில் விஜய் தான் காரணம்: நாசரின் நெகிழ்ச்சியான பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் நாசர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனது மகன் உயிர் பிழைக்க ஒருவகையில் விஜய் தான் காரணம் என்று கூறியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது.
நடிகர் நாசர் அந்த பேட்டியில் தனது மகன் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்ட போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார் என்றும் அப்போது அவர் உயிர் பிழைப்பாரா என்ற சந்தேகம் இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் அந்த விபத்துக்கு பிறகு தனது மகன் ஞாபக சக்தியை இழந்து விட்டதாகவும் ஆனால் அவர் ஒரு வெறித்தனமான விஜய் ரசிகர் என்பதால் விஜய் என்ற பெயர் மட்டும் அவரது நினைவில் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
எங்கள் மகனின் நெருங்கிய நண்பராக விஜய் ஆனந்த் என்பவர் இருந்தார் என்றும் அவரை தான் தனது மகன் ஞாபகம் வைத்திருப்பதாக புரிந்து கொண்டதாகவும் ஆனால் அதன் பின்னர் தான் நடிகர் விஜய் மட்டுமே அவருக்கு ஞாபகம் இருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார். இதுகுறித்து கேள்விப்பட்ட விஜய் தனது மகனின் பிறந்த நாளன்று வீட்டிற்கு வந்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் அந்த அளவுக்கு விஜய் மிகவும் மனிதநேயம் உடையவர் என்றும் நாசர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
என்னோட மூத்த பையன் விஜய்யோட மிகப்பெரிய ஃபேன் ஒரு பெரிய விபத்துல அவனுக்கு நினைவுகள் எல்லாம் போய்டுச்சு அவனுக்கு நினைவுல இருக்கது விஜய் மட்டும் தான் ஒருவிதத்தில என் பையன் திரும்ப வந்ததுக்கு காரணம் விஜய் தான்- நடிகர் "நாசர்"@actorvijay அண்ணா ??❤️??#ThalapathyVijay #Master #Beast pic.twitter.com/aUydOiVGzm
— Priyamudan Karthik (@KarthikMdr3) July 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com