சென்னை மருத்துவமனையில் நடிகர் நாசர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சரத்குமாரை எதிர்த்து நடிகர் நாசர் போட்டியிடவுள்ளார். தனது அணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நாசர் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாசருக்கு நெஞ்சு வலி என்றும் அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மிக வேகமாக இணையதளங்களில் வதந்தி பரவியது. இதனால் உடனடியாக நாசரின் மனைவி கமீலா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும் இது ஒரு வழக்கமான மாஸ்டர் செக்-அப் என்றும் தனது கணவர் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் நாசர் தற்போது நலமாக இருப்பதாகவும், அவர் நாளை வீடு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com