'தளபதி 67' படத்தில் நரேனும் இருக்கின்றாரா? அவரே அளித்த ஆச்சரிய பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் செய்திகள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அர்ஜுன், கௌதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், நிவின் பாலி, மிஷ்கின் உள்பட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்தப் படத்திற்கு படப்பிடிப்பு தொடங்கும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் கேரக்டர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் ‘கைதி’ படத்தில் உள்ள டெல்லி கேரக்டர், ‘விக்ரம்’ படத்தில் உள்ள சூர்யா கேரக்டர் உள்பட பல லோகேஷின் யுனிவர்ஸ் கேரக்டர்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்த நரேனும் இந்த படத்தில் நடிக்க இருப்பது செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து நரேன் விளக்கம் அளித்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘’தளபதி 67’ திரைப்படத்தில் தான் இல்லை என்றும் ஒருவேளை தான் அந்த படத்தில் இருந்தால் யூனிவர்ஸ் முற்றிலுமாக மாறி விடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ’கைதி 2’ படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
#Thalapathy67 ????????pic.twitter.com/JJHWCOxt3D
— ᴜsᴇʀ ɪs ʜʏᴘᴇᴅ ғᴏʀ #Varisu (@JD_Jaffna) November 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com