close
Choose your channels

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  'ஆத்மா': பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகித் இப்படத்தை இயக்கியுள்ளார். K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவை சேர்ந்த நடிகைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஸ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment