அரசியல்வாதிகளை நினைத்தால் அருவருப்பாக உள்ளது: சமந்தா விவகாரம் குறித்து பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர், அரசியல்வாதிகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலுங்கானா அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு, நடிகை சமந்தா, நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், பல தெலுங்கு திரையுலகினர் அமைச்சருக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகர் நானி தனது சமூக வலைத்தளத்தில், எப்படிப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்கள், ஊடகங்களுக்கு முன்னால் அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும் இந்த செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.