தாய்ப்பால் கொடுத்த அனுபவம்: நடிகர் நகுல் மனைவியின் உருக்கமான தகவல்!
- IndiaGlitz, [Friday,August 06 2021]
நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த குழந்தைக்கு தற்போது ஒரு வயது முடிந்துள்ளதை அடுத்து இந்த ஒரு வருடத்தில் தான் தனது குழந்தைக்கு கொடுத்த தாய்ப்பால் அனுபவங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவை நகுல் மனைவி ஸ்தி உருக்கமாக பதிவு செய்துள்ளார்
எனது மகள் அகிரா பிறந்து ஒரு வருடம் ஆகிறது என்றும், இந்த ஒரு வருடத்தில் நான் அவருக்கு தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்து உள்ளேன் என்றும், எனக்கு எனது கணவர் நகுலும் ஆதரவாக இருந்தார் என்றும் நாங்கள் இருவருமே அகிராவை அந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்று கூறியுள்ளார்
குழந்தை பிறந்து முதல் மூன்று நாட்கள் தனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றும் அதனால் தனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது என்றும் ஆனால் ஐந்தாவது நாள் தாய்ப்பால் சுரந்ததை அடுத்து தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்து வருகிறேன் என்றும் மூன்று மாதங்கள் முதலில் கடினமாகவும் மன அழுத்தம் ஆகவும் பயமாக இருந்தாலும் அதன் பின்னர் தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை நான் பழகிக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்
மேலும் குழந்தைக்கு குழந்தைக்கு பல் முளைக்கும் நாட்கள் மட்டுமே கொஞ்சம் கடினமானது என்றும் அந்த நேரத்தில் குழந்தைகள் கடிக்கும்போது வலி இருந்தாலும் அந்த வலி தனக்கு சுகமான வலியாகவே இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் தாய்ப்பால் கொடுப்பது வெறும் உணவளிப்பது மட்டுமின்றி நமக்கும் குழந்தைக்கும் அது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உணர்வுப் பூர்வமானதும் கூட என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதியின் இந்த பதிவுக்கு நடிகர் நகுல், உலகின் தலைசிறந்த அம்மா என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.