மீண்டும் கர்ப்பமான நகுல் மனைவி: நிறைமாதத்தில் எடுக்கப்பட்ட  போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Wednesday,May 25 2022]

இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ ’வல்லினம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். தற்போது அவர் ’எரியும் கண்ணாடி’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான சுருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது நகுல் மற்றும் சுருதி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நகுலின் மனைவி சுருதி தற்போது மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.