பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் இந்த ஹீரோவா?

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர் என்பதைப் பார்த்தோம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் பிக்பாஸ் நான்காவது சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் 5வது சீசன் வழக்கம்போல் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐந்தாவது சீசனுக்குரிய போட்டியாளர்களை வளைத்து போடும் பணிகளில் விஜய் டிவி நிர்வாகம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது

முதல் கட்டமாக ஷங்கரின் ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் நகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

நகுல் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேறு சில பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓரிருவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்ட ரேகா, ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது