நகைச்சுவை நடிகர் பெற்ற மூன்றாவது இளங்கலை பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை, வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்தும் தனியாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது நகைச்சுவை காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்காளை சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்ற கனவில் சென்னை வந்தார். 18வது வயதில் கராத்தே பிளாக் பெல்ட் பெற்ற இவர் ’பொன்மனம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ஏராளமான படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் இலக்கிய தேர்வில் முதல் நிலையில் வெற்றி பெற்று மூன்றாவது பட்டத்தை பெற்று அசத்தியுள்ளார். ஏற்கனவே 2017 பிஏ தமிழ் வரலாற்றில் இரண்டாம் வகுப்பிலும், 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள முத்துக்காளை தற்போது அவர் இளங்கலை தமிழ் இலக்கிய தேர்வில் (B.Lit) பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

ஏற்கனவே 3.21 மணி நேர ரன்னிங் டைம்.. ஓடிடியில் இன்னும் அதிகம் என அறிவிப்பு.. எந்த படம்?

 திரையரங்குகளில் வெளியாகும் போது 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருந்த படம் ஓடிடியில் இன்னும் அதிக நேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் தானா, எனக்கும் மரியாதை தர வேண்டும்.. ரசிகரின் பதிவுக்கு மோகன்ராஜா பதில்..!

 தமிழ் திரையுலகின் புத்திசாலித்தனமான வில்லன் கேரக்டர் 'தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு  கேரக்டர் என்று ரசிகர் ஒருவர் செய்த பதிவுக்கு அந்த கேரக்டரை

போண்டாமணி குடும்பத்திற்கு முதல் நபராக நிதியுதவி செய்த விஜயகாந்த்.. எவ்வளவு தெரியுமா?..

காமெடி நடிகர் போண்டா மணி நேற்று காலமானதை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதல் நபராக கேப்டன் விஜயகாந்த் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 5 பேர்.. தப்பித்த பூர்ணிமா, அர்ச்சனா..!

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஓப்பன் நாமினேஷன் நடந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையி

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இந்த பிரபலம் இயக்க வேண்டிய படமா? வைரல் புகைப்படம்..!

தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தின் டைட்டில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' நேற்று வெளியானது என்பதும் இது குறித்த மோசன் வீடியோ வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.