பாடகியுடன் காதலா? முரட்டு சிங்கிள் விரதத்தை முடிக்கின்றாரா பிரேம்ஜி?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜி, பாடகி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானதையடுத்து இருவரும் காதலிப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகனுமான பிரேம்ஜி, நடிகர் இசையமைப்பாளர் என இரண்டு அவதாரங்களில் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் இவருக்கு ஒரு கேரக்டர் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் 42 வயதாகும் பிரேம்ஜிக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த போதிலும் சரியான பெண் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பாடகி விநய்ட்டா உடன் பிரேம்ஜி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தில் ’உன் பார்வையில் நீ என்னை பிடித்துக் கொண்டு இருக்கிறாய் பேபி! நான் இருட்டில் உன்னுடன் என் கைகளுக்கு இடையில் நடனம் ஆடுகிறேன்’ என்று ரொமான்ஸாக பதிவுசெய்துள்ளதை அடுத்து விரைவில் இருவரது காதல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout