விஜய் ஆண்டனிக்கு என்ன ஆச்சு? மலேசிய மருத்துவமனையில் அனுமதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துவரும் படங்களில் ஒன்று ’பிச்சைக்காரன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வந்தது.
தமிழ் உள்பட நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.
இதனை அடுத்து அவர் மலேசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments