விஜய் ஆண்டனிக்கு என்ன ஆச்சு? மலேசிய மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துவரும் படங்களில் ஒன்று ’பிச்சைக்காரன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வந்தது.

தமிழ் உள்பட நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.

இதனை அடுத்து அவர் மலேசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 

More News

'ஏகே 62', 'சந்திரமுகி 2' மட்டுமல்ல, மேலும் 6 படங்களை தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ் : என்னென்ன படங்கள்?

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் 'சந்திரமுகி 2' ஆகிய இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே

'தளபதி 67' படத்தில் விஜய்யின் கேரக்டர் இதுதானா? ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் நான்கு நாட்களில்130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த இந்த படம் தமிழ்நாட்டில்

'தலப்பொங்கல்' கொண்டாடிய ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி.. வைரல் புகைப்படங்கள்!

 இந்த ஆண்டு நயன்தாரா, ஹன்சிகா உள்பட பல திரையுலக பிரபலங்கள் தலப்பொங்கல் கொண்டாடி வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி ஜோடியும் தல பொங்கல்

தொடங்கியது 'சந்திரமுகி 2' படத்தின் பிசினஸ்.. மாஸ் அறிவிப்பு

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அஜித் ஜோடியாக உலக அழகி.. படப்பிடிப்புக்கு முன்பே முடிந்த வியாபாரம்.. 'ஏகே 62' படத்தின் மாஸ் தகவல்கள்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்பதும் இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து தொடர்ச்சியாக வசூல் சாதனை செய்து வருகிறது .