கேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் பெற்றோர்: கதறி அழும் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,August 18 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் 'சிலந்தி, 'கண்டேன் காதல்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவரும் தற்போது உருவாகி வரும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து கொண்டிருப்பவருமான நடிகர் முன்னாவின் பெற்றோர், கேரள மாநிலம் பூவஞ்சேரி என்ற பகுதியில் இருப்பதாகவும், அவர்களை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களுக்கு என்ன ஆச்சோ? என்றும் நடிகர் முன்னா கண்ணீருடன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது பெற்றோர் கடைசியாக பூவஞ்சேரியில் உள்ள ஒரு சர்ச்சில் தஞ்சமடைந்ததாகவும், அதன் பின்னர் அவர்களது நிலைமை என்ன என்று தெரியவில்லை, தனது பெற்றோர் குறித்து யாருக்காவது தெரிய வந்தால் உடனே தனக்கு தகவல் கொடுக்கும்படியும் அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' ரிலீஸ் எப்போது?

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன் 'ஜுங்கா' வெளியாகிய நிலையில் அவரது தயாரிப்பில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கேரள வெள்ள நிவாரண நிதியாக உதயநிதி வழங்கிய தொகை

கேரளாவுக்கு கடந்த சில நாட்களாக பெரும் சோதனையாக உள்ளது. அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.

5 நிமிசம் கதவை திறக்கறேன்: வெளிய போறவங்க போங்க: கமல் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் நிகழ்ச்சியே முடிந்துவிடும்.

மீன் விற்றதாக கேலி செய்யப்பட்ட மாணவி கொடுத்த ரூ.1.5 லட்சம் வெள்ள நிதி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனன் என்பவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து கொண்டே பகுதி நேரமாக மீன் விற்று வந்தார்.

கேரளாவுக்காக மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்த விஷால்

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியும், நிலச்சரிவால் பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது