வீட்டில் இருங்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகலை பலர் கடைபிடிக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்,பாஸ்கர் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

நாம் அனைவரும் வீட்டில் இருந்தால், பெற்றோர்களுக்கு உதவியாக இருந்தால் இந்த வியாதியை ஒழித்துவிடலாம். மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்னைவிட நீங்கள் அனைவரும் வயதில் சிறியவர்களாக தான் இருப்பீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் நான் கையெடுத்துக் கும்பிட்டு உங்களை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அரசாங்கமும் பெற்றோர்களும் சொல்வதை கேளுங்கள்.

இந்த வியாதியை ஒழிக்க உங்களாலான உதவி வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருந்தாலே போதும். காரணம் இல்லாமல் வெளியே வராமல் இருந்தால் நிச்சயம் இந்த வியாதியை ஒழித்துவிடலாம். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். உங்கள் தகப்பன் மாதிரி நான் சொல்கிறேன்’ என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
 

More News

யோகிபாபுவை அடுத்து நடிகர் சங்கத்திற்கு உதவிய பிரபல காமெடி நடிகர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சினிமா படப்பிடிப்பை நம்பி வாழும்

த்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அதன் பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் விலகிவிட்டார்

கொரோனா உணவு வகைகள்!!!

உலக வரைபடம் முழுவதும் ஆக்கிரமித்து கொடூரமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவை தற்போது சிலர் தட்டில் வைத்து அழகுபார்த்து வருகின்றனர்.

கொரோனா; அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதுகூட பிரச்சனையா???

உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழல்நிலையில் தற்போது “சைட்டோகைன்“ என்ற புதிய புயலை மருத்துவர்கள் கிளப்பியிருக்கின்றனர்.

நேற்றைவிட இன்று இருமடங்கான கொரோனா பாசிட்டிவ்: பீலா ராஜேஷ் தகவல்

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில்