close
Choose your channels

மோகன்லால் மகளிடம் ஏற்பட்ட ஆச்சரியமான மாற்றம்: வைரலாகும் புகைப்படங்கள்!

Sunday, December 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மற்ற நட்சத்திர வாரிசுகளிடம் இருந்து வித்தியாசமானவராக காணப்படுகிறார்.. தாய்லாந்தில் வசிக்கும் விஸ்மயாவுக்கு எழுத்து மற்றும் தற்காப்பு கலைகளில் மிகுந்த ஆர்வம் என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஏற்கனவே அவர் தற்காப்புக் கலை குறித்த வீடியோக்களை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

மோகன்லால் மகள் விஸ்மயா செய்த ஆச்சரியம் தனது உடல் எடையை குறுகிய காலத்தில் கடினமான பயிற்சியின் மூலம் 22 கிலோ குறைத்ததுதான். தாய்லாந்தை சேர்ந்த டோனி என்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் அவர் உடல் எடைக்குறைப்பை ஒரு சவாலாக எடுத்து கொண்டு 22 கிலோ குறைத்துள்ளார். இதனையடுத்து பயிற்சிக்கு முன், பயிற்சிக்கு பின் என இரண்டு புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். முதல் புகைப்படத்திற்கும் இரண்டாம் புகைப்படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

அதேபோல் விஸ்மயா தனது பயிற்சியாளருக்கு நன்றி கூறி ஒரு நீண்ட பதிவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment