பிரபல அரசியல் கட்சியில் இணைந்த ரஜினியின் நெருங்கிய நண்பர்!
- IndiaGlitz, [Tuesday,March 26 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் அவர் கட்சி தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்து வரும் மக்களவை தேர்தலிலும் களம் காணுகிறார்.
இந்த நிலையில் அவருடைய இன்னொரு நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான மோகன்பாபு இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று அவர் அக்கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து தன்னை அவருடைய கட்சியில் இணைத்து கொண்டார்.
இருப்பினும் ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன் காலக்கெடு முடிந்துவிட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.